வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:00 IST)

வாழ்வா சாவா போட்டியில் ராஜஸ்தான் – இன்று பஞ்சாப்புடன் மோதல்!

இன்று நடக்க உள்ள 50 ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கிய அணிகளுள் ராஜஸ்தான் ராயல்ஸும் ஒன்று. ஆனால் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைக் கண்டதால் புள்ளிப் பட்டியலில் பின் வாங்கியது. 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். மேலும் அந்த அணியின் ரன்-ரேட்(-0.505) மிகவும் கம்மியாக உள்ளது. இதனால் அடுத்து வரும் இரண்டு போட்டிகளையும் வென்று மற்ற அணிகளின் ரன்ரேட்டைப் பொறுத்தே பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் வலுவான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தோற்றால் சென்னையை அடுத்து வெளியேறும் அணியாக ராஜஸ்தான் இருக்கும்.