கிறிஸ் கெய்லுக்கு முன், கிறிஸ் கெய்லுக்கு பின்: பஞ்சாப் அணியின் அபார மாற்றம்!

கிறிஸ் கெய்லுக்கு முன், கிறிஸ் கெய்லுக்கு பின்
siva| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:17 IST)
கிறிஸ் கெய்லுக்கு முன், கிறிஸ் கெய்லுக்கு பின்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது

அனைத்து அணைகளும் 7 போட்டிகளில் விளையாடி முடித்திருந்த நிலையில் 7 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஆறு தோல்விகளை பஞ்சாப் அணி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்தான் அதிரடியாக பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் களம் இறங்கினார். அவர் களம் இறங்கிய பின்னர் பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. நேற்று முடிவடைந்த போட்டியில் பெற்ற வெற்றியை சேர்த்து அந்த அணி தற்போது 6 வெற்றிகள் கிடைத்தது

அதாவது கிறிஸ்கெய்ல் வந்த பின்னர் அந்த அணிக்கு 6 வெற்றிகள் கிடைத்தது மட்டுமின்றி ஒரு தோல்வியை கூட அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்ரி கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறிவிட்டது. மேலும் அடுத்த சுற்றிலும் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது

கிறிஸ் கெய்ல் வருகைக்கு பின்னர் அந்த அணி அபார பலமடைந்து உள்ளது மற்ற அணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :