1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India England series to be named as Tendulkar Anderson trophy

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

இந்திய அணி
இந்திய அணி இம்மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான அணியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

வழக்கமாக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் தொடருக்கு பட்டோடிக் கோப்பை என்று பெயர் வைக்கப்படும். ஆனால் தற்போது அந்த தொடருக்கு ‘டெண்டுல்கர்- ஆண்டர்சன்’ கோப்பை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டைச் சேர்ந்த இரு ஜாம்பவான்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.