ஹைதராபாத் அணியை சமாளிக்குமா பஞ்சாப் அணி: மொஹாலியில் இன்று பலப்பரீட்சை

h
Last Modified வியாழன், 19 ஏப்ரல் 2018 (11:07 IST)
ஐபிஎல் தொடரின் 16-வது போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.
 
மொஹாலியில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 16-வது ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது நான்காவது போட்டியாகும், ஹைதராபாத் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது.
h
 
இந்நிலையில், இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி ஹைதராபாத் அணியை வீழத்தி புள்ளி பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :