1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ricky ponting talked about shubman gill flaws

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

இந்திய அணி
இந்திய அணி இம்மாதம் 20 ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஒரே நேரத்தில் ரோஹித், விராட் மற்றும் அஸ்வின் ஆகிய மூன்று சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் அணி இங்கிலாந்தில் விளையாடவுள்ளது. கோலி இல்லாததால் அவரின் நான்காவது இடத்தில் ஷுப்மன் கில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஃபென்ஸ் முக்கியம். ஷுப்மன் கில்லுக்கு டிஃபன்ஸில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர் தன்னை சில சமயங்களில் மிகையாக நினைத்துக் கொள்கிறார் அல்லது அவர் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகி விடுகிறார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்துக்கும் 100 சதவீதம் தேவை. ஏழு மணிநேரமும் கவனம் தேவை. அதுதான் ஷுப்மன் கில்லுக்கு சவால்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth