ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 ஏப்ரல் 2018 (20:02 IST)

ஹார்டிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் ராஜஸ்தான்!

ஐபிஎல் 2018 இன்றைய பொட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.
 
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி முதல் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தனது ஹார்டிக் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.