திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (09:53 IST)

யாருப்பா இந்த தம்பி…. கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டான் – கலக்கிய RCB வீரர்!

நேற்றைய போட்டியில் ஆர் சி பி அணியின் சுயாஷ் பிரபுதேஸாய் என்ற இளம் வீரர் அறிமுகமானார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. 

ராபின் உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார்.  ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரும் தான் பெங்களூரு அணிக்கு இந்த இமாலய இலக்கை நிர்ணயித்தவர்கள். துவக்கம் முதலே சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்த போட்டியில் பெங்களூர் அணி தோற்றாலும், கடைசி வரை போராடியது போட்டியை விறுவிறுப்பாக்கியது. இந்த போட்டியில் 4 விக்கெட் இழந்தபின்னர் வெளியான ஆர் சி பி அணியின் சுயாஷ் பிரபுதேஸாய் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கலக்கினார். ஒரு கட்டத்தில் இவரின் அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கே கலக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபு தேஸாய்.