வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (08:02 IST)

கேப்டனாக முதல் வெற்றி... ஜடேஜா Emotional !!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

 
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. பெங்களூரு அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. 
 
ராபின் உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார்.  ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரும் தான் பெங்களூரு அணிக்கு இந்த இமாலய இலக்கை நிர்ணயித்தவர்கள். துவக்கம் முதலே சிறப்பாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
தொடர்ந்து 4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா கூறியதாவது, இந்த வெற்றி நான் கேப்டனாக பெறும் முதல் வெற்றி. இது எப்போதும் எனக்கு சிறப்பானது. எனவே, முதல் வெற்றியை எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன். 
 
முந்தைய நான்கு ஆட்டங்களில் எங்களால் எல்லையை கடக்க முடியவில்லை. ஆனால் ஒரு குழுவாக நாங்கள் நன்றாக மீண்டு வந்துள்ளோம். நான் இன்னும் கற்றுக்கொண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என தெரிவித்தார்.