வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (15:36 IST)

சி எஸ் கே வீரர்களைப் பார்த்ததும் உற்சாகமான டூ பிளஸ்சி – வைரலாகும் வீடியோ!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த டு பிளஸ்சி இந்த ஆண்டு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதான கேப்டனாக டு பிளஸ்சி இருக்கிறார். பெங்களூர் அணி அவர் தலைமையில் நான்கில் மூன்று போட்டிகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளையும் தோற்றுள்ள சிஎஸ்கே இந்த போட்டியை வென்றே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதையடுத்து தற்போது இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதையடுத்து சிஎஸ்கே வீரர்களை சந்தித்த டு பிளஸ்சி உற்சாக மிகுதியில் ஒவ்வொருவராக சென்று சந்தித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அது சம்மந்தமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.