செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:15 IST)

தோனியுடன் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர்: ஆச்சரிய தகவல்

தோனியுடன் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர்
நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி தோனியின் 200ஆவது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடிய போது அவருடன் விளையாடிய 21 பேர்களில் 20 பேர் தற்போது ஐபிஎல் போட்டிகளிலே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
தோனியுடன் முதல் போட்டியில் விளையாடிய பியூஷ் சாவ்லா மட்டுமே இன்றும் விளையாடி வருகிறார் என்பதும், அதுவும் தோனியுடன் சிஎஸ்கே அணியிலேயே விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் தோனியின் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடி ஒரே வீரர் பியூஷ் சாவ்லா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடும் வீரர்களில் ஒருவராக இருந்த பிளம்மிங் இன்று அதே அணிக்கு பயிற்சியாளர் என்பதும், அதேபோல் 2008 சிஎஸ்கே அணியில் விளையாடிய முரளிதரன் இன்று ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது