1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (18:04 IST)

எதிர்பார்த்தது போலவே இன்னிங்ஸ் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.. சொந்த ஊரில் இலங்கை பரிதாபம்..!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில்166 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில்166 5 விக்கெட் இழப்புக்கு 576 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபிக் மிக அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார் என்பதும் அதேபோல் சல்மான் என்பவர் 132 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக  அப்துல்லா சபிக் தேர்வு செய்யப்பட்டார்.  இதனை அடுத்து  இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்று தொடர வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran