ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (10:20 IST)

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை.. சென்னை வருகை..!

கடந்த ஒன்பதாம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை கடற்படையினர் சுற்றுவளைத்து அவர்களை கைது செய்தனர் 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைதுக்கு தமிழக மீனவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.  தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை நீதிமன்றம் அறிவித்தது 
 
இதனை அடுத்து 15 பேர் இன்று காலை விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வள துறையை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran