1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (15:00 IST)

ஒருநாள் தொடரில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்: என்ன காரணம்?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையே இன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை ஒருவரான முகமது சிராஜ் விலகியுள்ளார்.  
 
காயம் காரணமாக  ஒரு நாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிஐ தெரிவித்துள்ளது.  
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 29ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 
 
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முகமது சுராஜ் விலகிய நிலையில் டி20 கிரிக்கெட் தொடரில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran