திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (15:16 IST)

டபுள் செஞ்சுரியை நெருங்கும் பாகிஸ்தானி அப்துல்லா.. இன்னிங்ஸ் வெற்றிக்கு வாய்ப்பு..!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடந்துவரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் அப்துல்லா சபிக் என்பவர் 190 ரன்கள் எடுத்துள்ளதை அடுத்து அவர் இன்னும் சில நிமிடங்களில் டபுள் செஞ்சுரி அடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 166 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து தற்போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடு வரும் நிலையில் சற்றுமுன் அந்த அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் அடித்துள்ளது 
 
தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபிக் 190 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் இதில் 18 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி 231 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் அந்த அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva