இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சஸ்பெண்ட்: அதிர்ச்சி தகவல்..!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடரை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன
ஆட்டம் கையில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவரில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் நிலையில் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட எல்பிடபிள்யூவுக்கு எதிராக ஹர்மன்பிரீத்தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். களத்தில் பேட்டால் ஸ்டெப்புகளை தாக்கினார் இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது
இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் அவர்களை ஐசிசி 2 போட்டிகளுக்கு விளையாட தடை விதித்துள்ளது.
Edited by Mahendran