ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி…கொல்கத்தா போராடி தோல்வி
ஐபிஎல் தொடரின் 30வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தனர்.
எனவே பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 103 ரன்களும், படிக்கல் 24 வ், சாம்சன் 38 ரன்களும், ஹெட்மர் 26 ரன்களும், எடுத்து அசத்தினர். 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து கொல்கத்தாவுக்கு 218 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.
கொல்கத்தா அணியில் நரென் 2 விக்கெட்டும், மாவி மற்றும் ரசல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியில் பின்ச் 58 ரன்களும், ஐயர் 85 ரன்களும், ரானா 18 ரன்களும்,ஜாக்சன் 8 ரன்களும், அடித்தனர். 19.04 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 210 ரன்கள் எடுத்து தோற்றது.
எனவே, ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.