வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (01:07 IST)

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இளைய மகன் உயிரிழப்பு…உலக ரசிகர்கள் அதிர்ச்சி

கால்பந்து விளையாட்டு உலகில் முடிசூடா மன்னதாகத் திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகள் நாட்டைச் சேர்ந்த இவர் தேசிய அணிக்காக விளையாடும் அதேவேளை,இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடி வருகிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில், தங்களின் இளைய மகன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது எத்தனை பெரிய வலி என்பது பெற்றோர்கள் உணரமுடியும்.  எங்களின் மகன் தான் இந்த நொடி எங்களுக்கு ஆறுதலாகவும் பலனாகவும் உள்ளதாக நம்புகிறோம்.

மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்  நன்றி….எங்களுடைய மகன்  நீயொரு தேவதை,நாங்கள் எப்போதும் உன்னை காதலிக்கிறோம் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.