தொடர்புடைய செய்திகள்
- இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!
- இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?
- தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!
- ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!
- சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!
அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணியிலுமே பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர். பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாத அளவுக்கு மைதானம் மிகவும் தட்டையாக அமைக்கப்பட்டிருந்ததாக விமர்சனம் எழுந்தது.
அடுத்த போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. இது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகக் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆர்ச்சர் அணியில் இருந்த தற்போது அணியில் இணைவது அந்த அணிக்குக் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.