தொடர்புடைய செய்திகள்
- விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது தெலுங்கு இயக்குனரா? தெலுங்கு தயாரிப்பாளர் தூண்டில் போட்டது இதுதானா?
- ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம்- எய்ம்ஸ் இயக்குனர் அறிவுரை!
- தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? மே 6 ல் ஆலோசனை!
- ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா? குழப்பத்தில் ரசிகர்கள்!
- 15.41 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
தனி விமான திட்டம் இப்போதைக்கு இல்லை… ஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி!
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸி வீரர்களை தனி விமானத்தில் நாட்டுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது.
ஐபிஎல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்வதாக சொல்லபப்டுகிறது. ஒருவேளை ஆஸி வீரர்கள் கிளம்பினால் மற்ற நாட்டு வீரர்களும் அதே போல கிளம்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இது சம்மந்தமாக இப்போது பேசியுள்ள ஆஸி கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி. , இப்போதைக்கு ஆஸி வீரர்களை தனி விமானத்தில் அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். நேற்று ஐபிஎல் ல் விளையாடும் இரு அணிகளைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
