புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (08:00 IST)

ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுமா? குழப்பத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2021 சீசன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மிக மோசமாக உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் பயோ பபுளில் வீரர்களை வைத்து நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ள இருந்த நிலையில் கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இன்றைய போட்டி மே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது மற்றொரு அதிர்ச்சி செய்தியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி, மற்றும் அணிப்பேருந்தின் ஓட்டுனர் உதவியாளர் ஆகியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கன்டறியப்பட்டுள்ளது.

இரு அணிகளில் 5 பேருக்குக் கொரோனா இருப்பதால் அனைத்து அணி வீரர்களையும் மறுபடியும் சோதனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த சோதனையில் மேலும் சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அது மேலும் சிக்கலை உருவாக்கலாம். அதனால் தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் நடத்தி முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.