வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (07:59 IST)

ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம்- எய்ம்ஸ் இயக்குனர் அறிவுரை!

கோப்புப் படம்

கொரோனா தொற்றுள்ளவர்கள் தேவையில்லாமல் சி டி ஸ்கேன் எடுக்க வேண்டாம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுள்ளதா என்பதைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் மேற்கொள்ளப்படுகிறது. அதில் குழப்பமான முடிவுகள் வெளிவந்தால் சி டி ஸ்கேன் எடுக்க சொல்லி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் சி டி ஸ்கேன் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியபோது ‘லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய் தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்க தேவையில்லை. ஒருமுறை சி டி ஸ்கேன் எடுப்பது 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். அதே போல லேசான அறிகுறி தென்பட்டவுடன் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் அவை கொரோனா வைரஸுக்கு சாதகமாக செயல்படும்’ எனக் கூறியுள்ளார்.