வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (13:50 IST)

இலங்கை அணிக்கு எதிரான முக்கிய போட்டி: நியூசிலாந்து அணியில் என்ன மாற்றம்?

newzeland
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.

இன்றைய போட்டி இலங்கை அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 
நியூசிலாந்து அணியின் தற்போது 8 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருந்தாலும் கடைசி லீக் போட்டியான இன்றைய போட்டியில் அந்த அணி வென்றே தீர வேண்டும். அப்போதுதான் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பாக அமையும்.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்து விட்டால் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் நியூசிலாந்து அணி இன்று தனது முழு திறமையையும் காண்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியில்  சோதிக்கு பதிலாக பெர்குசன் அணியில் இணைந்துள்ளார். அதேபோல் சாமிகா கருணாரத்ன இலங்கை அணியில் இணைந்துள்ளார் என்பதும் அவருக்கு பதிலாக கசுன் ரஜிதா வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Edited by Siva