வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (10:40 IST)

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு ஆறுதலாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் வெற்றி அமைந்திருக்கும். அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து வரிசையான இந்திய டெஸ்ட் தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த நிலையில் இந்த வெற்றிகள் உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளன.

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் செய்யபப்ட்ட மாற்றம் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் இறங்கும் கே எல் ராகுல் ஆறாவது இடத்தில் பேட் செய்ய வைக்கப்படுகிறார். இது ஒரு நிலையான வியூகமாக இது இருக்காது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்  இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது குறித்து பதிலளித்துள்ள பயிற்சியாளர் கம்பீர் “ரிஷப் பண்ட்டுக்கு, அவருக்குரிய வாய்ப்பளிக்கப்படும். ஆனால் இப்போது எங்கள் முன்னுரிமை எல்லாம் கே எல் ராகுலுக்குதான். அணியில் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.