1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (21:32 IST)

அர்ஜூன ரணதுங்கா தலைமையிலான புதிய இடைக்கால குழுவுக்கு தடை

Arjuna Ranatunga
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இத்தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் வென்று  16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  இலங்கை அணி  8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன்  8 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இத்தொடரில் இலங்கை அணியின் தொடர் தோல்வியால் சர்ச்சையை சந்தித்துள்ள நிலையில், தற்போதைய கிரிக்கெட் குழுவை கலைத்துவிட்டு, ஏழு பேர் கொண்ட இடைக்கா குழுவை  நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்க ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் மோசமான செயல்பாட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து, முன்னாள் வீரர் அர்ஜூன ரணதுங்கா தலைமையில் அமைக்கப்பட்ட புதிய இடைக்கால குழு செயல்பட நீதிமன்றம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தலைவராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் தடை விழுந்ததால் அவர் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வெளியேறினார்.