1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 டிசம்பர் 2020 (08:38 IST)

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி – நியுசிலாந்து வலுவான ஸ்கோர்!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 460 ரன்களை சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு இப்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் நியுசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் நியுசிலாந்து அணி வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.

இதில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து முதல் நாள் ஆட்டமுடிவில்  84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் சதமடித்து களத்தில் நின்றார். அதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அவர் 174 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் வாக்னர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் நியுசிலாந்து அணி 460 ரன்களை சேர்த்தது.

வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் கேப்ரியல், ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், செமார் மற்றும் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.