செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (09:07 IST)

குணமடையா காயம்; டெஸ்ட் போட்டியில் வார்னருக்கு இடமில்லை!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடமாட்டார் என அறிவிப்பு. 
 
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், ஒரு நாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 17 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. 
 
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் காயம் குணமடையாததால் பங்கேற்க முடியவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.