1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (18:34 IST)

அடுத்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி: சென்னையில் முதல் டெஸ்ட்!

அடுத்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் விரைவில் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டியும் தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இது குறித்த சுற்றுப்பயண அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது