தொடர்புடைய செய்திகள்
- பஸ் விட்டா போதுமா, பப்ளிக் வர வேண்டாமா? போக்குவரத்து கழகம் குமுறல்!
- ஐந்தே நிமிடத்தில் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கலாம்! இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு!
- ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஆர்யாவின் புது படம்!
- விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குகிறேன் – பிரபல இயக்குனரின் பெயரில் மோசடி!
- உறுதியானதா சிம்பு கௌதம் மேனன் படம் ? இந்த படத்தின் பார்ட் 2 வா!
பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி – களைகட்ட போகும் மொடாரோ மைதானம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் பொருட்டு கடந்த ஓராண்டுக்கு முன்னதாக பகலிரவு டெஸ்ட் போட்டியை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் கடந்த ஆண்டு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 5டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மொடரோ மைதானத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடக்கும் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 டி 20 போட்டிகளும் அதே மைதானத்தில் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்