1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:23 IST)

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து!

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து நாட்டில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது
 
இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்ததால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இன்றைய முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது 
 
நிக்கோலஸ் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். யங் 43 ரன்களும் மிட்செல் 42 ரன்களும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும் ஜோசப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக இரு அணிகளுக்கும் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே