செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (10:23 IST)

ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர்கள் வீசியது யார்?

ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர்கள் வீசியது யார்?
இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவது பெரும்பாலும் யார்க்கர்களாகத்தான் உள்ளது. குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் 6 பந்தில் 2 அல்லது 3 பந்துகள் யார்க்கர்கள் வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பது தொடர்கதையாகி வருகிறது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இதுவரை அதிக யார்க்கர்கள் வீசிய பந்து வீச்சாளர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது
 
ஐதராபாத் அணியை சேர்ந்த நடராஜன் இதுவரை 27 யார்க்கர்கள் வீசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பும்ரா 17 யார்க்கர்ககளையும், பிராவோ மற்றும் முகமது சமி 9 யார்க்கர்ககளையும் வீசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சரியான அளவில் யார்க்கர்களால் விக்கெட் விழுவது உறுதி அல்லது குறைந்தபட்சம் ரன் எடுக்க முடியாத டாட்பால் ஆகுவது உறுதி என்பதால் பெரும்பாலும் பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை பயன்படுத்தி வருகின்றனர் 
 
ஆனால் அதே நேரத்தில் ஒரு திறமையான பேட்ஸ்மேனுக்கு யார்க்கர்கள் வீசினால் அது பவுண்டரி அல்லது சிக்ஸ் போகவும் வாய்ப்புள்ளது என்பதால் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வரும் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் யார்க்கர்கள் வீசப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது