செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (07:16 IST)

பாஜகவில் இணைந்த மேலும் ஒரு சினிமா பிரபலம்: புதிய பதவிகள் கிடைக்குமா?

bjp
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து தமிழக பாஜகவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக, அதிமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைந்தனர் என்பதும், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே. மேலும் பாஜகவில் இணைந்த சினிமா பிரபலங்கள் பலருக்கும் பாஜகவில் பதவியும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சினிமா பிரபலம் பாஜகவில் இணைந்துள்ளார். பிரபல தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான பிரமிட் நடராஜன் நேற்று பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை எல்.முருகன் அவர்கள் வழங்கினார்
 
பாஜகவில் இணைந்த நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன் கூறியதாவது: பாஜகவில் இணைந்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும். அப்படி இப்போது கடவுள் மோடி ரூபத்தில் பூமிக்கு அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறது’ என்று கூறினார். பாஜகவில் இணைந்த பிரமிட் நடராஜன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பிரமிட் நடராஜன் அவர்களுக்கு விரைவில் முக்கிய பதவி ஒன்றும் அளிக்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
 
பிரெண்ட்ஸ், சமுத்திரம், துள்ளுவதோ இளமை, வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரமிட் நடராஜன், ‘லவ் பேர்ட்ஸ்’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘பிஸ்தா’, ‘பொன்மனம்’, ‘சங்கமம்’ உள்ளிட்ட ஒருசில படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது