அவர் ஒரு சிட்டி ரோபா... தனுஷின் நடிப்பை கண்டு வியந்த நடிகை சஞ்சனா நடராஜன்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:02 IST)

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் , முதல் சிங்கிள் ட்ராக் உள்ளிட்டவை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பினை அதிகரித்தது.

இப்படத்தில் சுருளி தனுஷிற்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நடராஜன் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்துள்ளார். தனுஷுடன் நடித்தது குறித்து கூறிய அவர்,
இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. முதல் நாள் நடிப்பதற்கு மிகவும் பதற்றப்பட்டேன். பின்னர் தனுஷ் தான் என்னை சரி செய்தார். அவர் முதல் டேக் முதல் மூன்றாவது டேக் வரை அதே எனர்ஜியுடன்
சிட்டி ரோபோ மாதிரி தனக்கான கதாபாத்திரம் முழுவதையும் உள்வாங்கி நடிப்பார் என்று கூறியுள்ளார் சஞ்சனா.


இதில் மேலும் படிக்கவும் :