செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (16:40 IST)

தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கம்…. ரசிகர்கள் ஏமாற்றம்!

விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் விளையாட உள்ள தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலமாக கவனம் ஈர்த்த தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். காயத்தில் இருந்து குணமான பின்னரும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் தமிழக அணிக்காக விளையாடினார். தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் அடுத்து நடக்க உள்ள விஜய் ஹசாரே 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். நடராஜனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.