திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (11:25 IST)

5 மாதத்துக்குப் பின் களத்தில்… மகிழ்ச்சியில் நடராஜன்!

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அமீரகத்துக்கு சென்றுள்ளார்.

ஐபிஎல் மூலமாக புகழ் வெளிச்சம் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன், இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக தொடரில் இருந்து விலகினார். அதையடுத்து அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

இதனால் கடந்த ஐந்து மாதங்களாக அவர் எல்லா கிரிக்கெட் போட்டிகளையும் இழந்தார். இந்நிலையில் இப்போது கடினமான பயிற்சிகளின் மூலம் அவர் உடல்தகுதியைப் பெற்றுள்ளார். இப்போது அவர் அமீரகத்தில் நடக்கும் எஞ்சிய ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்று அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சன் ரைசர்ஸ் அணி அவர் பந்து வீசும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.