1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (19:33 IST)

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு இரட்டை குழந்தைகள்: குவியும் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு இரட்டை குழந்தைகள்: குவியும் வாழ்த்துக்கள்
பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து உள்ளதாக வெளியான தகவலை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு விளையாட்டு வீராங்கனை தீபிகா பல்லிகல் என்பவரைக் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் இரண்டு ஆண் குழந்தைகள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் பள்ளிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது