திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2025 (16:40 IST)

சி எஸ் கே அணியில் பந்துவீச்சு யூனிட்டில் இணையும் பிரபலம்!

42 வயதாகும் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் என எதிர்பார்ப்பு எழுந்து, ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சி எஸ் கே அணியால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் இன்னும் சில ஆண்டுகள் சி எஸ் கே ரசிகர்கள் தோனி இருப்பாரா இல்லையா என்ற பதற்றம் இல்லாமல் போட்டிகளைப் பார்க்கலாம். இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் ஜுரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சி எஸ் கே அணி பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

சி எஸ் கே அணியில் துணை பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்ரீராம் ஸ்ரீதரன் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியிலும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.