ஒவ்வொரு நாளும் வலிமை அதிகமாகிறது… நடராஜன் டிவீட்!

Last Modified புதன், 19 மே 2021 (08:26 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் காயத்தில் இருந்து மீண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மூலமாக புகழ் வெளிச்சம் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன், இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக தொடரில் இருந்து விலகினார். அதையடுத்து அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

அதன் பின்னர் இப்போது வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்மந்தமாக அவர் ‘ஒவ்வொரு நாளும் வலிமையுடன் மீண்டு வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :