திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (07:51 IST)

விருதுகளை விற்று வாழும் பழம்பெரும் நடிகை!

பழம்பெரும் நடிகை பாவலா சியாமளா தனது மருத்துவ மற்றும் குடும்ப செலவுகளுக்காக தான் வாங்கிய விருதுகளை விற்க ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் 1980 களில் நடிகையாக நடித்து பிரபலமானவர் பாவலா சியாமளா. அதன் பின்னர் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு மதுவடலரா என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில் வருமானம் இல்லாததால் தான் வாங்கிய விருதுகளை விற்று பணம் ஈட்டி வருகிறாராம். காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவ மற்றும் குடும்ப செலவுகளுக்கு வேறு வழியில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.