திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (19:30 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது 
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு
 
மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்
 
டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், லலித் யாதவ், அஸ்வின், ரபடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்,