ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (22:21 IST)

ஐபிஎல் 2021 - ராஷித் கானுடன் நோன்பு இருந்த வீரர்கள்

ஐபிஎல் 2021 -14 வது சீசன் தற்போது சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சன்ரைஸ் அணி வீரர் ராஷித் கானுடன் இணைந்து சக வீரர்களான வார்னரும் வில்லியம்சனும் ரம்ஜான் நோன்பு இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் அனைத்து அணிகளும் சிறப்புடன் விளையாடி வருகின்றன. ஆனால் கடந்தாண்டு போலவே இவ்வாண்டும் பார்வையாளர்கல் இல்லாமல் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில்,சன் ரைசர்ஸ் ஐதராபத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் ரம்ஜான் நோன்பு இருந்து வருகிறார்.  அந்த அணியின் வார்னர் மற்றும் வில்லியம்சன் இருவரும் நோன்பு இருந்து வருகின்றனர். மதத்தைக் கடந்து இருவரும் நோன்பு இருப்பது கண்டு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.