டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!
இங்கிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அணி 426 ரன்கள் எடுத்த நிலையில், 427 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இன்னொரு அணி வெறும் 2 ரன்கள் ஆல் அவுட் ஆகியிருப்பது, கிரிக்கெட் வரலாற்றில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில், நார்த் லண்டன் சிசி என்ற அணி முதலில் பேட்டிங் செய்து 45 ஓவர்களுக்கு 426 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 427 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ரிச்மேண்ட் சிசி என்ற அணி, இலக்கை எட்ட முடியாததுமட்டுமின்றி, வெறும் 2 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகியது.
அதில் ஒரு ரன் மட்டுமே ஓடி எடுத்துள்ளனர் என்பதும், மீதி ஒரு ரன் வைடு மூலம் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நார்த் லண்டன் சிசி அணியின் மேட்ரோசன் என்ற வீரர், மூன்று ஓவர்கள் வீசி, ஒரு ரன் கூட கொடுக்காமல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிரிக்கெட் போட்டி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Edited by Siva