தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து செய்த தவறு… இம்பேக்ட் பிளேயருக்கும் சேர்த்து அபராதம்!
- எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!
- தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
- ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!
- தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!
RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!
கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. லீக் போட்டிகள் முடிந்து பஞ்சாப் கிங்ஸ் லெவன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள முடிந்து பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்று முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் லீக் போட்டிகளில் நடந்த போட்டிகளில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. சண்டிகரில் இந்த போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
இரு அணிகளும் இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் இடங்களைப் பிடித்துள்ளன. இரு அணிகளுமே இதுவரைக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இன்று நடக்கும் போட்டியின் மூலம் கோப்பையை வெல்லாத ஒரு அணி இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்