வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (20:29 IST)

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி - 20 : வெல்லுமா இந்தியா ?

நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதி வரை சென்று தோல்வியை தழுவியது. இதனால் கிரிக்கெட் அணியில் பல மாற்றங்களை செய்ய தொடங்கியது பிசிசிஐ.இந்நிலையில்  வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்று பயணம் செய்துள்ள இந்திய அணியில்  மகேந்திரசிங் தோனி இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு சற்று வருத்தம்.
இந்நிலையில் ,இன்று அமெரிக்காவில், கேப்டன் விராட்  கோலி தலைமயிலான இந்திய அணிக்கும்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையேயான முதல் டி - 20 இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. 
 
இதில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களாமிறங்கிய  போவெல் பந்துக்களுகு  1 பந்துக்கு ரன் எதுவும் அடிக்காமலும்  , கே. பொல்லார்ட் 8 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது 5. 2 ஓவர் முடிவில் 29 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல் ஆட்டம், ஆடிவருகிறது.