வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (17:01 IST)

கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் விளையாடி வருகிறது என்பதும் இந்த போட்டிகள் ஒவ்வொன்றும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஐபில் போட்டியில் உள்ள அணிகளில் விளையாடவும், அணிகளின் பயிற்சியாளராக மாறவும் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்கல்லம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு அவர் பயிற்சியாளராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐந்தாவது இடத்தையே அடைய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி, பிரண்டன் மெக்கல்லம் வருகையால் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வரும் 2020ஆம் ஆண்டு பெறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் 
 
101 டெஸ்ட் போட்டிகள், 260 ஒருநாள் போட்டிகள், 71 டி20 போட்டிகள் ஆகியவற்றில் விளையாடிய பெரும் அனுபவமுள்ள மெக்கல்லம் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது