1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Jio will broadcast tomarrow match because of Kohli

கோலி களமிறங்குவதால் ரஞ்சிக் கோப்பை போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஜியோ!

கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது.

இதன் காரணமாக சீனியர் வீரர்கள் உள்பட அனைவரும் சர்வதேசப் போட்டிகள் இல்லாத போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதையேற்று ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் மாநில அணிகளுக்காக விளையாடினர். அந்த வரிசையில் கோலியும் நாளை நடக்கவுள்ள டெல்லி மற்றும் ரயில்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார்.

இதன் மூலம் 13 ஆண்டுகள் கழித்து அவர் உள்ளூர் போட்டிகளுக்குத் திரும்பியுள்ளார். இந்த போட்டியில் கோலி விளையாடுவதால் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது ஜியோ ஓடிடி.
About Writer
vinoth