வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:07 IST)

இந்திய அணியைப் பாராட்டிய கங்குலிக்கு மைக்கேல் வானின் பதில்!

இந்திய அணி ஓவல் டெஸ்ட்டில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஓவல் டெஸ்ட்டை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஓவல் டெஸ்ட்டின் ஆரம்பத்தில் மோசமாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து விஸ்வரூபம் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது. ஓவலில் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதைப் பாராட்டும் விதமாக பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி ‘சிறப்பான காட்சிகள். திறமைதான் வித்தியாசம். அழுத்தத்தை உறிஞ்சிக்கொள்ளும் மிகப்பெரிய வித்தியாசம். இந்திய அணி மற்ற அணிகளைக் காட்டிலும் அதிக உயரத்தில் உள்ளது.’ எனக் கூறியிருந்தார். அதில் பதிலளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.