செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:32 IST)

ஆஷஸ் தொடரைப் பற்றி நினைத்து இந்தியாவிடம் கோட்டைவிட்டனர்… இந்திய முன்னாள் கேப்டன் கருத்து!

இந்திய அணிக்கு எதிரான தொடரை இங்கிலாந்தும் அந்நாட்டு ஊடகங்களும் எளிதாக எடை போட்டுவிட்டார்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஓவல் டெஸ்ட்டை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. ஓவல் டெஸ்ட்டின் ஆரம்பத்தில் மோசமாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து விஸ்வரூபம் எடுத்து வெற்றியைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி பற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் ‘இங்கிலாந்து அணியும் ஊடகங்களும் இந்த தொடரை பற்றி நினைப்பதை விட்டு எதிர்வரும் ஆஷஸ் தொடரைப் பற்றியே கவனம் செலுத்தி பேசினர். இந்திய அணியை எளிதாக நினைத்து விட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் பவுலர்கள் அதிக ரன்களை சேர்க்கவிட்டது இங்கிலாந்து. அப்படி அவர்கள் ரன்கள் சேர்த்தால் பவுலர்கள் மிகவும் தன்னம்பிக்கை அணிந்து பந்து வீசுவார்கள். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவலில் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.