செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:20 IST)

ரவி சாஸ்திரிக்கு கொரோனா வர இந்த நிகழ்ச்சிதான் காரணமா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு இரு தினங்களுக்கு முன்னர் கொரொனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபி ஆகிய மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று வரக்காரணம் கடந்த வாரத்தில் அவர்கள் ஒரு புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டதுதான் என சொல்லப்படுகிறது. பயோ பபுளில் இருக்கும் நிலையில் அவர்கள் கூட்ட நெறிசல் உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிசிசிஐ அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.