திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:08 IST)

சிங்கங்கள் வருது.. தங்கப்பதக்கத்தை ரெடியா வைங்க! - ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி மோதல்!

Indian Hockey Team

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிக் கொள்ள உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரிஸில் பரபரப்பாக நடந்து வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பல நாடுகளும் ஏராளமான தங்க, வெள்ளிப் பதக்கங்களை அள்ளி சென்று வரும் நிலையில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இந்தியா தங்கம் பதக்கம் வெல்லும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட பி.வி.சிந்து உள்ளிட்ட பல நம்பிக்கை நட்சத்திரங்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

 

ஆனால் இந்திய ஹாக்கி அணி தனது அதிரடி ஆட்டத்தால் தற்போது அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து எதிர்கொண்ட இந்திய அணி பெனால்டி சூட்டில் அதிரடி வெற்றியை பெற்றது.  இதற்கு காரணமாக அமைந்தவர் இந்தியா ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்.  இவர் 2021 இல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மூன்றாவது இடத்திற்கான இந்தியா - ஜெர்மனி மோதலில் வெண்கல பதக்கத்தை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர்.
 

 

 தற்போது அதே ஜெர்மனியோடு இந்தியா இந்த ஒலிம்பிக்கில் அரை இறுதிப் போட்டியில் இன்று மோதுகிறது.  சுமார் 18 ஆண்டுகளாக இந்தியா ஹாக்கி அணியில் கோல் கீப்பராக பல சாதனைகளை செய்துள்ள ஸ்ரீஜேஷ்  இந்த போட்டியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.  மேலும் இந்த முறை இந்திய அணி அரை இறுதியை வென்று இறுதிப் போட்டியிலும் வென்று தங்கம் வெல்லும் என ஹாக்கி ரசிகர்களிடையே மிகப்பெரும் நம்பிக்கை உள்ளது.

 

 இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்று இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வெல்லுமா இந்திய சிங்கங்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

 

Edit by Prasanth.K