மீண்டும் மழை – தாமதமான பங்களாதேஷ், இலங்கை போட்டி !

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (18:03 IST)
இங்கிலாந்தில் இன்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதுவரை 3 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வெறும் 7 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

போட்டி தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் களத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வேளைப் போட்டித் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :